Labour Welfare Board
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம்
Tamil Nadu Unorganised Workers Welfare Board
Labour Welfare Board
  • தங்களது உறுப்பினர் பதிவினை புதுப்பிக்க புதுப்பித்தல் தேதி முடிவடைவதற்கு சுமார் ஒரு மாதம் இருக்கும் நிலையில் விண்ணப்பிக்கலாம்.
  • பதிவு பெறற் தொழிலாளர்கள் தமது பதிவினை 5 (ஐந்து) ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 60வயது நிறைவடையும் வரை புதுப்பிக்க வேண்டும்.
  • நாளது தேதி வரை புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டுமே உதவித் தொகைகளை பெற இயலும்.
  • முதல் முறை இந்த இணையதளத்தில் உள் நுழைபவர்கள் தங்களது பதிவு அட்டை எண் மற்றும் கைப்பேசி எண் மூலம் உள்நுழையலாம்
  • விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் தங்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பபடும்.
  • தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின் சம்பந்தப்பட்ட அதிகாரி விவரம் கேட்பார், கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மூலம் விவரம் கேட்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
  • தங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தங்களுக்கான புதுப்பித்தல் விவரம் தங்களது பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அதன் மூலமாக புதுப்பித்தல் செய்யப்பட்ட பதிய பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • ஏற்கனவே உள்ளீடு செய்த தங்களுடைய விபரங்களை சரிபார்த்து ஏற்கனவே அலுவலகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ அல்லது விடுபட்ட விவரங்கள் இருந்தாலோ அவ்விவரங்களை சரிசெய்து சமர்ப்பிக்கலாம். தங்களால் திருத்தம் செய்யப்பட்ட விபரங்களை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அவர்கள் மூலம் ஒப்புதல் பெற்றவுடன் தங்களது பதிவு புதுப்பித்தல் செய்யப்படும்.
  • ஏற்கனவே பதிவு அட்டை உள்ளவர்கள் அனைவரும் தங்களது விபரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். புதுப்பித்தல் நிறைவடைந்தவர்கள் மற்றும் நிறைவடைய உள்ளவர்கள் மட்டும் புதுப்பித்தல் செய்ய விண்ணப்பம் செய்யவேண்டும்.
  • தேவைப்படும்பொழுது இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் விவரங்களைப் பார்வையிடலாம், விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு, சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் ஏதும் இல்லைை
புதுப்பிக்க அளிக்க விடுபட்ட விவரங்களை உள்ளீடு செய்யவும் / Please insert the left out details for renewal
Please enter your registration number
 

(உங்கள் கைபேசி எண்ணை உள்ளிடவும்)
Please enter your mobile number

  • தங்கள் கைபேசி எண் மூலம் மீண்டும் உள்நுழைந்து தங்களிடம் கேட்டகப்பட்ட கேள்விக்கு ஏற்ப விண்ணப்பத்தில் மாற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் பெற்று தங்களது பதிவு அட்டை புதுப்பித்தல் செய்யப்பட்டு புதுப்பித்தல் செய்த விபரம் பதிவு செய்த கைபேசி எண் மூலமாக கிடைக்கப்பெறும். அதன் மூலமாக புதுப்பித்தல் செய்யப்பட்ட புதிய பதிவு சான்றிதழ் பதவிறக்கம் செய்துகொள்ளலாம்
1. பதிவு அட்டை

இவ்வலுவலகத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட அசல் பதிவு அட்டை மற்றும் இணைப்பு அட்டை இருப்பின் அதனை முழுமையாக அனைத்து பக்கங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும்.

2. அடையாளச் சான்றிதழ்

ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரிடமிருந்து சான்றிதழ் அல்லது அரசு மருத்துவமனையின் சிவில் சர்ஜன் பதவிக்கு குறைவில்லாத மருத்துவரின் சான்றிதழ் (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) பதிவேற்றவும்.

3. குடும்ப அட்டை
4. வங்கி கணக்குப்புத்தகம் முதல் பக்கம்
5. ஆதார் அட்டை
6. வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம்

திருமணத்திற்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் மற்றும் குடும்ப அட்டை துணை ஆவணமாக இருக்க வேண்டும் (அல்லது) திருமணத்திற்கு முன் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினராக (அல்லது) குடும்பத்திற்கு வெளியே உறுப்பினராக இருக்க முடியும். எனவே பரிந்துரைக்கப்படுபவருடன் தொழிலாளர் உறவு சம்பந்தப்பட்ட ஆவணம் பதிவுயேற்றவும்.

Server 1 || 2023. All Rights Reserved.